ஃபைசரின் தடுப்பூசி 90 சதவிகிதம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், தங்களது கண்டுபிடிப்பான ஸ்பூட்னிக் V தடுப்பூசி 92 சதவிகிதம் பலனளிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இறுதி கட்ட சோதனையை நடத்துவதால், இந்த தகவல் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியசில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஸ்பூட்னிக் தடுப்பூசியை மைனஸ் 2 டிகிரி செல்சியசில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.