பஹ்ரைன் நாட்டு புதிய பிரதமராக, இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா (Sheikh Salman bin Hamad al-Khalifa) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஹமாத் துணைப் பிரதமராக பணியாற்றியுள்ளார்.
மேலும் பஹ்ரைனின் பாதுகாப்புப் படையின் துணை தளபதியாக இருந்தார். சர்வதேச நாடுகளுடன் இணக்கமாகவே செல்ல விரும்பும் ஹமாத்தினால் அந்நாட்டு வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக உலகின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பஹ்ரைன் பிரதமர் காலிபா பின் சல்மான் அல் காலிபா தனது 84 வது வயதில் அமெரிக்காவில் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.