அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்பதற்கான வழிமுறைகள் சுமூகமாக நடைபெறும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். ஜனவரி 20ஆம் நாள் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ள அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முடிவை ஏற்க மறுத்து அதிபர் டிரம்ப் பிடிவாதமாக உள்ளார். அவரது நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராக உள்ள மைக் பாம்பியோவும் அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியில் டிரம்ப் 2வது முறை அமர்வதற்கான வழிமுறைகள் சுமூகமாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.