வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பு வடக்கு மொசாம்பிக்கில் உள்ள கபோ டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் இந்த பயங்கர அட்டூழியத்தை நிகழ்த்தி உள்ளது.
அங்குள்ள கால்பந்து மைதானத்தை தங்கள் கொலைக் களமாக மாற்றிய பயங்கரவாதிகள் அங்குள்ள கிராம மக்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைகளை வெட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களின் இந்த தாக்குதல்களின் மூர்க்கத்தன்மை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.