இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா கலையின் நண்மைகள் குறித்து எகிப்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்ற கிசா பிரமிடுகள் முன் நடைபெற்றது.
மாலை வேளையில், 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பிரமிடுகள் முன் திரண்டு, உற்சாகமாக யோகாசனங்களை நிகழ்தினர். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு பயன்படுத்தப் போவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.