கொரோனா தொற்றை தடுப்பதில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து 90 சதவீதம் பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
அந்த மருந்தின் 3வது கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனாவை தடுப்பதில் 90 சதவீதம் பலனை தருவது தெரியவந்துள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் டோஸ் கொடுத்த 28 நாட்களிலும், 2வது டோஸ் கொடுத்த ஒரு வாரத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பு கிடைப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நடப்பு ஆண்டிலேயே 5 கோடி டோஸ் மருந்துகளும், அடுத்த ஆண்டு 130 கோடி டோஸ் வரையிலும் மருந்தை தயாரித்து உலகம் முழுவதும் வினியோகிக்க முடியும் என்று பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.