அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா விவாகரத்து செய்வார் என, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் அதிகாரத்தில் இருக்கும்போது அவரை விவாகரத்து செய்தால் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மெலானியா தனது முடிவை ஒத்திவைத்துள்ளதாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ட்ரம்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக் கசப்பு இருப்பதாக, ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.