மியான்மர் நாட்டின் 2வது பொதுத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.
ராணுவத்துக்கு முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில், தற்போதைய அரசின் தலைமை ஆலோசகராக இருந்து வரும் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
அவரை எதிர்த்து தான் டே தலைமையிலான ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி போட்டியிடுகிறது.