அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றபடுவார் என ஜோ பைடன் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், மோசடி நடைபெற்றிருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டுவதால் தோல்வி நேரிட்டால் அதை ஏற்றுக் கொள்வாரா என தெரியவில்லை.
இந்நிலையில் ஜோ பைடன் செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரு பேட்ஸ், அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றபடுவார் எனவும், வெள்ளை மாளிகையில் அத்துமீறி தங்கியிருப்போரை வெளியேற்றும் திறன் அமெரிக்க அரசுக்கு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.