மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
நிகரகுவா நாட்டில் ஈட்டா புயல் கரையை கடந்த நிலையில், அண்டை நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் மெக்சிகோவில் மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் நகரங்கள் பல வெள்ளக்காடாக காட்சியளித்தன. கவுதமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மண்ணில் புதையுண்டு மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.