இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் Leicester ல் De Montfort பல்கலைக்கழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்டார்.
இங்கிலாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 2வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தமது பயணத்தின் போது அவர் கொரோனா சோதனையை மேற்கொண்டார். மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை எடுத்து அங்கிருந்த செவிலியரிடம் அவர் அளித்தார்.