அமெரிக்க அதிபர் டிரம்ப் சினம் தணிந்து அமைதி காக்க வேண்டும் எனச் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பர்க் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் சீற்றத்துடன் பேசிய சுவீடன் சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், 2019ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமை என டைம் இதழ் அறிவித்தது.
இதனால் பொறுமையிழந்த டிரம்ப், இது எவ்வளவு அபத்தமானது என்றும், கிரேட்டா சினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் பின்னடைந்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி டிரம்ப் கூறியுள்ள நிலையில், அவரின் பழைய ட்வீட்டையே சுட்டிக்காட்டி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என டிரம்ப் கூறியதைக் குறிப்பிட்டு, இது எவ்வளவு அபத்தமானது என்றும், டிரம்ப் சினத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்றும் கிரேட்டா குறிப்பிட்டுள்ளார்.