மத்திய அமெரிக்காவில் ஈட்டா புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 18பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஹோண்டூராஸ் கடல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவில் வீசிய புயல்களில் மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இந்த ஈட்டா புயல் கருதப்படுகிறது. 4புயல்களின் தன்மையை இந்த புயல் கொண்டுள்ளது என்பதில் இருந்தே இதன் வீரியத்தை உணர முடியும்.
மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய ஈட்டா புயல் கடந்த 3ந் தேதி ஹோண்டூராஸ் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக நிகரகுவா, ஹோண்டூராஸ், கவுதமாலா மற்றும் கோஸ்டா ரிகா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.