மேற்கு ஐரோப்பாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து பிரான்ஸில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த மாதம் பாதிப்பு கண்டறியப்பட்டதன் காரணமாக அங்கு 2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன.
மேலும், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பிரான்ஸின் ஒரு பகுதிக்கு அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய்ப்பரப்பும் பறவைகளிடம் இருந்து கோழிகள் மற்றும் வாத்துகளை காப்பதற்கு பண்ணைகளைச் சுற்றி வலைகளை நிறுவவும், பறவைகளை கண்காணிப்பில் வைத்திருக்கவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.