அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின் மாகாணத்தில் மிகக் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஜோ பிடேன் வெற்றி பெற்றுள்ளார்.
அம்மாகாணத்தில் நேற்று மதியம் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிபர் டிரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார்.
இது வாக்குப் பதிவில் பூஜ்யம் புள்ளி 6 விழுக்காடு மட்டுமே முன்னிலையாகும். இதையடுத்து ஒரு விழுக்காடுக்கும் குறைவாக வாக்கு வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் மறு எண்ணிக்கை நடத்த டிரம்ப் தரப்பு கோரிக்கை விடுத்தது. அப்படி இருந்தும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.