அமெரிக்காவில், 538 எலக்டோரல் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் நாற்காலியை கைப்பற்றுவார் என்ற நிலையில், இரண்டு வேட்பாளர்களுமே தலா 269 வாக்குகளை பெற்றால் என்ன ஆகும் என்பதற்கு அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதிநிதிகள் சபை, இருவரில் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்கும். துணை அதிபரை செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.
தற்போது நடக்கும் தேர்தலில், ஜோ பிடனும், டிரம்பும் சரிசமமாக 269 வாக்குகளை பெறுவர்கள் என வைத்துக் கொண்டால், அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள பிரதிநிதிகள் சபை தயாராக இருப்பதாக சபாநாயகர் நான்சி பெலோசி கூறியிருக்கிறார்.
அதே நேரம், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை நோக்கி சென்றாலும், ஜோ பைடன் தாமாகவே அதிபராக வந்து விடுவார் என்பதையும் அறுதியிட்டு கூற முடியாது.