சீனாவின் பன்னாட்டுச் சந்தையை விரிவுபடுத்த இந்தியாவிடமிருந்து ஆக்ரமித்த காஷ்மீரின் கில்ஜித்- பல்திஸ்தான் பகுதிகளை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்த போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிகுந்த கவலைக்கு ஆளானதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஆக்ரமிப்பு பகுதிகளை தனது நிலப்பரப்பாக கூறியே சீனாவின் முதலீட்டுகளை பாகிஸ்தான் பெற்று வருகிறது.
ஆக்ரமிப்பு காஷ்மீரில் கால் பதிக்க சீனாவுக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவும் கண்டனத்தை சர்வதேச அரங்குகளில் வெளியிட்டுள்ளதால், சீனாவுக்கு வர்த்தக வாசல் திறக்க நினைத்த பாகிஸ்தானின் திட்டம் தவிடுபொடியாகி விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.