துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து சுமார் 65 மணி நேரத்துக்கு பிறகு 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
அலறல் சப்தம் கேட்டு கட்டிட இடிபாடுகளில் சோதனையிட்ட மீட்புப் படையினர், அதில் இருந்து அய்டா கெஸ்ஜின் என்ற சிறுமியை மீட்டனர்.
பின்னர் சிறுமியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.