செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் தாக்குதல்... 100 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன?

Nov 03, 2020 04:24:34 PM

ஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே, ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து, தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாவதற்கு ஒரு சில மணிநேரத்துக்கு முன்பு பொதுமக்கள் தேவாலயங்கள், பார்கள் மற்றும் உணவகங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

நேற்றிரவு, வியன்னாவின் மத்தியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பொது மக்கள் ஜெப வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது தேவாலயத்துக்கு அருகே வந்த  தீவிரவாதிகள் ஆறு வெவ்வேறு இடங்களில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். நூறு ரவுண்டுகளுக்கு மேல் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களால் உடல் துளைக்கப்பட்ட ஏழு பேர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த போலீசார் பயங்கர வாதிகளில் ஒருவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அந்த நபர் மத தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிவித்துள்ள நிலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர சேவை வாகனங்களின் சைரன் ஒலி நகரம் வியன்னா முழுவதும் ஒலித்தபடி இருக்கிறது.  

தீவிரவாதத் தாக்குதலையடுத்து, வியன்னாவில் ராணுவம் களமிறங்கப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் தேவாலயத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினார்களா என்று பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் இருக்கும் ஹோட்டல்கள், சாலை, தேவாலயம் ஆகியவற்றைப் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், “தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்துவிடக் கூடாது. நேற்று எங்களைத் தாக்கினர். இன்று எங்கள் நண்பரைத் தாக்கியுள்ளனர். இதைத் தொடரவிடக்கூடாது” என்று தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

அமெரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வியன்னாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஐரோப்பாவில் அடுத்தடுத்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் கியூசெப் கன்ட் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Advertisement
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
மெக்சிகோ சிறையில் கைதிகளின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்
ஜமைக்காவில் கொள்ளை சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழப்பு..
ஜப்பானில் விண்ணில் செலுத்தப்பட்ட 10-வது நிமிடத்தில் செயலிழப்பு செய்யப்பட்ட ராக்கெட்
பிரேசில்லில் கடல் வழியே ஜெட் ஸ்கீ பைக்கில் வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய சாண்டா கிளாஸ்
பிரான்சின் மாயோட்டில் வீசிய சிடோ சூறாவளிப்புயல்.. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க கூடும் என அச்சம்
சிரியா விவகாரம் குறித்து டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை
சிலியில் முதன்முறையாக காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்
சிரியாவின் கடற்படை கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை கைப்பற்ற ராணுவத்துக்கு நெதன்யாகு உத்தரவு

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement