நெதர்லாந்தில் டிராம் ஒன்று 10அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
ரோட்டர்டாம் பகுதியில் அந்த டிராம் நிற்பதற்காக சென்ற போது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு கீழே விழுந்தது. அப்போது டிராமில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அந்த டிராம் கீழே தரையில் விழாமல் அங்கு வடிவமைக்கப்பட்டிருந்த திமிங்கல சிலை மீது விழுந்தது. இந்த சம்பவம் குறித்து ரோட்டர்டாம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.