ஸ்பெயின் நாட்டின் Canary தீவுகளுக்கு படகில் வந்த 196 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஸ்பானிஷ் கடல் வழியாக Arguineguin துறைமுகத்திற்கு படகு ஒன்றில் 128 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டு படகு சென்றது. இதனைக் கண்ட ஸ்பெயின் கடலோர பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அந்த படகை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் படகில் இருந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் வெப்ப நிலை அளவிடப்பட்டது. Canary தீவுகளுக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.