பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீயை விட கடந்த மாதம் ஏற்பட்ட தீ இருமடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
அமேசான் காடுகளில் கடந்த அக்டோபர் மாதம் வரை 17 ஆயிரத்து 326 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது 2019 அக்டோபரில் 7 ஆயிரத்து 855 ஆக இருந்தது. வனப்பகுதியில் நெருப்பு வைப்பவர்களைக் கண்காணிக்க ராணுவத்தை நிறுத்தியிருந்தாலும் பலனில்லை என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை பிரேசில் அதிபர் போல்சனாரோ நிராகரித்துள்ளார்.