அமெரிக்காவில் நாளை நடக்கும் அதிபர் தேர்தலில் எதிர் எதிராக மோதும் டிரம்பும், ஜோ பைடனும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாநிலமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் டிரம்ப் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார்.
முன்னணி பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, விஸ்கோன்சின், புளோரிடா, அரிசோனா ஆகியவற்றில் ஜோ பைடனுக்கு பெரும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.