இந்திய உணவுகளில் தனக்கு நல்ல சாம்பாருடன் கூடிய இட்லியும் அனைத்து வகை டிக்காவும் பிடிக்கும் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், இன்ஸ்டாகிராம் வழியாக பொதுமக்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் தங்களால் முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தை போக்க, "நோ" என்ற வார்த்தையை காலை உணவாக சாப்பிட்டு விடுங்கள் என பெண்களுக்கு நகைச்சுவையுடன் கமலா ஹாரிஸ் ஆலோசனை வழங்கினார்.