ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபருக்கு எதிராக 12வது வாரமா ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேர்தல் முறைகேடு தொடர்பாகவும், பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ பதவி விலகக் கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் மின்ஸ்க்கில் 12 வது வாரமாக நேற்று நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படுவது அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.