இங்கிலாந்தில் வீசிய அய்டன் புயலால் அங்கு கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வேல்ஸ் பகுதியில் கடுமையான காற்றின் விளைவாக ஏராளமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றின் காரணமாக இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியை வேல்ஸுடன் இணைக்கும் செவர்ன் பாலம் மூடப்பட்டது.
மேலும் புயல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் அப்பகுதியில் கடல் சீற்றம் கடுமையாகக் காணப்பட்டது.