பிரான்சில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
லையான் என்ற இடத்தில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலாயத்தின் பாதிரியாரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பாதிரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரான்சில் ஒரே வாரத்தில் 3 வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.