அதிவேகமாகச் செல்லும் காரை அமெரிக்காவின் எஸ்எஸ்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ்வேகாசைச் சேர்ந்த சிறிய ரக கார் தயாரிப்பு நிறுவனமான எஸ்எஸ்சி என்ற நிறுவனம் புதிய காரைத் தயாரித்துள்ளது. இந்தக் காரின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நெவாடா தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது.
அப்போது உச்சகட்ட அளவான மணிக்கு 532 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. பொதுப்பயன்பாட்டில் இருக்கும் சாலையில் இவ்வளவு வேகத்தில் கார் இயக்கப்பட்டது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.