சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அந்நாட்டில் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் கோரியும் அரசியலமைப்பு சட்டத்தை புதுப்பிக்க வலியுறுத்தியும் கடந்த ஆண்டு முதல் போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில், தலைநகர் சாண்டியாகோவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டியடித்தனர்.