துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகள் இடையே, ஏஜியன் கடல்பகுதியை மையமாக வைத்து, ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், சுனாமி தாக்குதலும் நிகழ்ந்தது.
துருக்கியின் டோடெக்கனீஸ் தீவுகள் கூட்டத்தை மையப்படுத்தி, இந்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7 ஆகப் பதிவானது.
இதனால், பொதுமக்கள், வீடுகள், கட்டிடங்களிலிருந்து, அலறி அடித்தபடி வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிங்கள் குலுங்கின. சில இடங்களில், கட்டிடங்களில் இடிந்து விழுந்தன.
10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தீவுகள் கூட்டத்தை மையப்படுத்தி, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், துருக்கியின், இஸ்மிர் கடற்கரை பகுதியில், மிதமான அளவில், சுனாமி தாக்கியதாக, காட்சிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.