அசர்பைஜான் மீது அர்மீனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.
நாகோர்னா-காராபாக் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகள் இடையே மோதல் மூண்டுள்ளது. இதில் ரஷியா தலையிட்டு ஏற்படுத்திய 2 சண்டை நிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தன.
3-வதாக அமெரிக்கா தலையீட்டில் உருவான சண்டை நிறுத்தமும் தோல்வி கண்டிருக்கிறது. இந்நிலையில் அசர்பைஜான் நாட்டில் உள்ள பர்தா நகரத்தின் மீது அர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அசர்பைஜான் அதிபரின் செய்தி தொடர்பாளர் ஹிக்மெட் ஹாஜியெவ் கூறியுள்ளார்.