அர்ஜெண்டினாவில் காலி நிலங்களில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கின்போது வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கானோர் பியுனோஸ் ஏர்ஸ் அருகே உள்ள 98 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தில் தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர்.
இந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையாக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.