ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள், மருந்து பற்றாக்குறையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட சோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 21 நாட்களுக்குப் பிறகு 2வது முறையாக மீண்டும் செலுத்தப்பட வேண்டும் என்பதால், புதிதாக சோதனைகள் மேற்கொள்வதை நிறுத்திவைத்துள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாராக உள்ளதாக அறிவித்துள்ள பிரேசில் அரசு, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒப்புதல் பெறப்பட்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.