அமெரிக்காவில் தன்னை விரட்டியவர்களிடம் இருந்து தப்பிக்க மூஸ் வகை மான் ஒன்று தண்ணீரின் மேற்பரப்பில் ஓடுவது போன்ற வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மான் இனங்களில் மிகப் பெரியதான மூஸ் வகை மான்கள் அலாஸ்காவில் அதிகம் காணப்படுகின்றன. 500 கிலோ எடைகொண்ட இந்த மான் குறித்த ஆய்வுக்காக சிலர் படகில் சென்ற போது, அவர்களைக் கண்டு அச்சமடைந்த மூஸ் அசுர வேகத்தில் ஓடியது.
குறைந்த ஆழம் கொண்ட நீரில் ஓடினாலும், எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் அந்த மான் தண்ணீரின் மேற்பரப்பில் ஓடுவது போல பதிவாகி உள்ளது.