கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம், ஆன்டிபாடிஸ் எனப்படும், நோயெதிர்ப்புத் திறன், படிப்படியாக, வீழ்ச்சியடைந்து வருவதாக, பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, மீள்வோரிடம், ஆன்டிபாடிஸ் எனப்படும், நோயெதிர்ப்புத் திறன் குறித்த ஆய்வும், தீவிரமடைந்திருக்கிறது.
இதுகுறித்து, லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நடத்திய ஆய்வில், அதில், பெரும்பான்மையானோருக்கு, ஆன்டிபாடிஸ் எனப்படும், நோயெதிர்ப்புத் திறன், கடந்த சில மாதங்களில், பெருமளவில் வீழ்ச்சியடைந்து வருவது, தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே, கொரோனாவிலிருந்து மீள்வோரிடத்தில் உருவாகும் ஆன்டிபாடிஸ்கள், வைரசை தாக்காமல், சம்பந்தப்பட்டவரின் உடற்கூறுகளை தாக்குவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.