ரஷ்ய யூடியூபர் ஒருவர், மெர்சிடிஸ் கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது விலையுயர்ந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
யூடியூப்பில் கிட்டத்தட்ட 50 லட்சம் சப்ஸ்கரைபர்களை(subscribers) கொண்ட மிகைல் லிட்வின், சுமார் 2 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் காரை, திறந்த வெளி ஒன்றில் நிறுத்தி, அதன் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
பழுதை சரி செய்ய 5 முறை காரை அனுப்பியும், டீலர் சரி செய்யாததால் விரக்தியில் காருக்கு தீவைத்தததாக கூறப்படுகிறது.