இலங்கையில் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் மூடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர பெர்ணான்டோ என்ற காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தை இரு நாட்கள் மூடி வைப்பது என்றும், வளாகம் முழுவதிலும் மருந்து தெளித்து, சுத்தப்படுத்துவது என்றும் அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.
மேலும் காவலருடன் பணியில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்ற நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 22 பேருக்கும் சோதனை நடைபெற உள்ளது.
இலங்கையில் இதுவரை 7521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3,714 சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.