ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் தொடக்கத்தில் லண்டன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. நவம்பர் 2 ஆம் தேதி முதல், முதல்கட்ட கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்குமாறு லண்டன் மருத்துவமனை அறக்கட்டளையை சேர்ந்த பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள், வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், வயதானவர்களுக்கு குறைந்த பாதிப்பே ஏற்படுவது தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.