ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, அவசரகால பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி மாதம் கிடைக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி சுமார் 60 ஆயிரம் பேரிடம் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. பாதுகாப்பு தொடர்பான சில தடங்கல்கள் ஏற்பட்டதால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட சோதனை விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஆரம்பகட்ட முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கப்பெற்ற பின்னர் தடுப்பூசியை புத்தாண்டில் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என ஜான்சன் & ஜான்சன் நிறுவன முக்கிய அதிகாரி உலக சுகாதார மாநாட்டில் தெரிவித்தார்.