அமெரிக்காவில் காட்டெருமைகள் வாழ்வதற்கான சூழியல் தொந்தரவு செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள எல்லோஸ்டோன் பள்ளத்தாக்கில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. அமெரிக்காவின் தனித்துவ விலங்காகக் கருதப்படும் காட்டெருமை வாழும் பகுதியில் போடப்பட்ட சாலையால் அவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன.
அந்த விலங்குகளைக் காணவரும் சுற்றுலா பயணிகளும் அவற்றை துன்புறுத்துவதால் அமெரிக்கக் காட்டெருமைகள் சூழியல் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.