ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் உள்ள கடற்கரையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சீல்கள் இறந்து கிடக்கின்றன.
வெல்விஸ் வளைகுடா மற்றும் பெலிகன் பாய்ண்ட் ஆகிய இடங்களில் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக சீல்கள் இறந்து கிடந்ததைக் கண்ட விலங்கியல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஓஸியன் கன்சர்வேஷன் அமைப்பினர் நடத்திய ஆய்வில், சீல்கள் விரும்பி உண்ணும் மீன்கள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து இடம் பெயர்ந்ததால் இந்த அவலநிலை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.