கார்கில் போரால் பாகிஸ்தானுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்த போருக்கும், அதில் ராணுவ வீரர்கள் இறந்ததற்கும் சில ராணுவ அதிகாரிகள்தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் போர் வீரர்களிடம் ஆயுதமும் இல்லை உணவும் இல்லை என்று அவர் கூறினார்.
நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்ததற்கு சில ராணுவ அதிகாரிகளே பொறுப்பு என்றும் சாடிய அவர் இப்போரில் இந்தியா வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டினார். பலூச்சிஸ்தான் நகரான குவெட்டாவில் நடைபெற்ற 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார்.