ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர்.
2019ம் அக்டோபரில், நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வேலையில்லா திண்டாடத்திற்கு எதிராக தொடங்கிய போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதன் ஓராண்டு நிறைவை குறிக்கும் விதமாக, பாக்தாத் மற்றும் பாஸ்ரா நகரங்களில் கூடிய மக்கள், போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்கள் பொறித்த கொடிகளை ஏந்தியவாறு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.