சாம்சங் நிறுவனத்தை தொழில்நுட்ப உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்த லீ குன் ஹீ, தனது 78வது வயதில் காலமானார்.
1987ல் சிறிய தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சாம்சங், லீயின் கடின முயற்சியால் அடுத்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியது.
மொபைல்போன் தயாரிப்பு துறையிலும் கால்பதித்த சாம்சங் நிறுவனம், நோக்கியா, ஆப்பிள், சோனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி உலகளாவிய சந்தையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட லீ, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக சாம்சங் குழுமம் தெரிவித்துள்ளது.