இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலக வலியுறுத்தி, அவரது வீட்டுக்கு முன்பு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டில் கொரோனா தொற்றால், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக கூறியும், வேலையின்மை விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டித்தும் பல மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரதமர் பெஞ்சமினுக்கு எதிராக, தலைநகர் ஜெருசலமில், விசில் ஊதியும் பாதாகைகளை ஏந்தியும் ஏராளாமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.