ரஷ்யாவில் மது போதையில் பீரங்கியை இயக்கிய ராணுவ வீரர்கள், விமானநிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்தனர்.
வோல்கோகிரேடு என்ற இடத்தில் உள்ள ராணுவத் தளத்தில் சில வீரர்கள் மது அருந்தி விட்டு BMP-3 ரக பீரங்கியை இயக்கினர். மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து உள்ளே சென்றனர்.
தகவலறிந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இயக்கிய பீரங்கியில் ஆயுதங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.