அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு பிறகும் ஆர்மீனியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டி உள்ளது.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக அஜர்பைன்ஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த மாதம் முதல் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா வெளியுறவு அமைச்சர்களை நேற்று தனித்தனியாக சந்தித்தார். இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், ஆர்மீனியா தொடர்ந்து விரோதப் போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.