அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு வெள்ளைக்கொடிகளால் பிரம்மாண்ட அளவில் நினைவு சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக சிறிய அளவிலான வெள்ளை கொடிகளை நட்டு சுசேன் ப்ரென்னன் ஃபர்ஸ்டன்பெர்க் என்ற கலைஞர் நினைவு சின்னத்தை உருவாக்கி உள்ளார்.
வாஷிங்டனின் ஆயுத அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத்தை பொதுமக்கள் காண அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.