போலந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருவில் ஏற்படும் குறைபாடுகளை காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு விரோதமானது என அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.
இது பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தலைநகர் வார்சாவில் உள்ள ஆளுங்கட்சி தலைவர் கசின்ஸ்கியின் வீட்டின் அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர், கைகளில் பதாகைகளை ஏந்தி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.