அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக நடைபெற்ற, டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் இடையிலான கடைசி விவாத நிகழ்ச்சியை 6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நாஷ்வில்லேவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி விவாத நிகழ்ச்சி 15 சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பட்டது.
கொரோனா பேரிடர், சுகாதாரத்துறை, ஆற்றல் வளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை 6 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளதாக நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் விவாத நிகழ்ச்சியை 7 கோடிக்கும் அதிகமானோர் பார்த்த நிலையில், கடைசி விவாத நிகழ்ச்சி குறைவான பார்வையாளர்களையே ஈர்த்துள்ளது.